பீடாதிபதியின் செய்தி

  ருகுணு பல்கலைகலக, இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் நான் பெரும் பெருமிதமும் ஆழ்ந்த பொறுப்புணர்வும் அடைகிறேன். செப்டம்பர் 2017 இல் முறைப்படி நிறுவப்பட்டதிலிருந்து, இணைந்த சுகாதார விஞ்ஞான பீடமானது இலங்கையின் சுகாதாரக் கல்வியில் ஒரு முக்கிய தூணாக வேகமாக வளர்சியடைந்துள்ளது. எமது வரலாறு 2008 ஆம் ஆண்டில் மருத்துவ பீடத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்புத் திட்டத்தில்  வேரூன்றியுள்ளது. மருத்துவ ஆய்வக விஞ்ஞானம் மற்றும் தாதியர் கல்வியை அறிமுகப்படுத்தி, அதனைத் தொடர்ந்து 2010 இல் மருந்தகவியல் கல்வியையும் உள்ளடக்கிய அந்த ஆரம்ப காலங்களிலிருந்து, எமது பீடமானது ஒரு முக்கியமான தேசியத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் வளர்ந்துள்ளது. நவீன சுகாதாரத் துறையின் சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, மிகவும் திறமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தகுதி வாய்ந்த சுகாதார நிபுணர்களை உருவாக்குவதே அந்தத் தேவையாகும். இந்த மதிப்புமிக்க பீடத்தின் மூன்றாவது பீடாதிபதி என்ற வகையில், எனது தொலைநோக்குப்பார்வையானது, நாட்டில் முதன்மையான இணைந்த சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனமாக திகழ வேண்டும் என்ற எமது நிறுவனத்தின் கட்டளையோடு ஒத்துப்போகிறது. இந்தப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, காலி, வலாஹந்துவவில் அமைந்துள்ள அதிநவீன புதிய கட்டிட வளாகத்திற்கு நாம் மாறியமை அமைந்துள்ளது. இந்த 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பிரத்யேகமாக கட்டப்பட்ட வசதியானது, மேம்பட்ட மருத்துவப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றிற்குத் தேவையான உள்கட்டமைப்பை வழங்கி, எமது பீடத்திற்கு ஒரு புதிய யுகத்தைக் தொடங்கியுல்லது. எமது வளர்ந்து வரும் ஆராய்ச்சி செயட்பாடுகல், கல்விசார் சிறப்பிற்கான எமது அர்ப்பணிப்பை மேலும் நிரூபிக்கிறது. எமது வருடாந்த சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் (iRUFARS) மூலம், கண்டுபிடிப்புகள் வழியே சுகாதார சவால்களை எதிர்கொள்வதற்காக ஆராய்ச்சியாளர்களுக்கு உலகளாவிய தளத்தை நாங்கள் வழங்குகிறோம். nEUROcare, CAPAGE மற்றும் MARIE திட்டங்கள் போன்ற சர்வதேச கூட்டமைப்புகள் மற்றும் பல புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகள்/பங்களிப்புகள் மூலம் எமது உலகளாவிய தடம் விரிவடைவதையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த முயற்சிகள் எமது ஆராய்ச்சி வெளியீட்டை மேம்படுத்துவதோடு, ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் விலைமதிப்பற்ற பரிமாற்றங்களை எளிதாக்குகின்றன. இணைந்த சுகாதார அறிவியல் பீடத்தில், நூல் அறிவிற்கும் நடைமுறை பயிட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை நாங்கள் நிரப்புகிறோம். நேர்மை, புதுமை மற்றும் பொது சுகாதாரத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட ஒரு கல்வி கலாச்சாரத்தை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் ஒரு வருங்கால மாணவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ அல்லது சுகாதார பங்காளியாகவோ இருந்தாலும், இணைந்த சுகாதாரக் கல்வி மற்றும் நடைமுறையின் தரத்தை நாங்கள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எமது சமூகத்துடன் இணைந்திருக்குமாறு உங்களை அழைக்கிறேன்.ஒன்றாக இணைந்து, சுகாதார சேவை மற்றும் கல்வி மேம்பாட்டில் சிறந்து விளங்க பாடுபடுவோம். பேராசிரியர் வே.வி.ற.து.த.கு. பண்டார, பீடாதிபதி, இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், ருகுணு பல்கலைக்கழகம்.